திருப்பதி ஸ்பெஷல் கருப்பு உளுந்து மிளகு வடை.., எப்படி செய்வது?
திருப்பதி கோவிலில் உள்ள சுவாமி பாலாஜிக்கு இந்த சுவையான கருப்பு உளுந்து மிளகு வடை நெய்வேத்தியமாக வழங்கப்படுகிறது.
இந்த வடையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில், திருப்பதி ஸ்பெஷல் கருப்பு உளுந்து மிளகு வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- 1 கப்
- சீரகம்- 5 ஸ்பூன்
- மிளகு- 5 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- பெருங்காயத் தூள்- சிறிதளவு
- கடலை எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் கருப்பு உளுந்து எடுத்து தண்ணீரில் 2 முறை நன்கு கழுவி 5 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊறவைக்கவும்.
இதனிடையே சீரகம், மிளகு எடுத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
இதையடுத்து ஊறவைத்த உளுந்தில் இருந்து தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.
இதன் பிறகு ஏற்கெனவே அரைத்த சீரகம், மிளகை இதில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பின் இதில் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து மாவை வட்டமாக தண்ணீர் தொட்டு தட்டவும்.
இறுதியாக கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி சூடான பிறகு மாவை போட்டு மிதமான பொறித்து எடுத்தால் திருப்பதி திருமலை வடை ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |