திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமாக எவ்வளவு நகை இருக்கு தெரியுமா?
இந்தியாவின் மிகப் பெரிய கோயிலின் ஒன்றாகக் கருதப்படுவது திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில்.
இங்கு எழுந்தருளியிருக்கும் ஏழுமலையான் பணக்கார கடவுள்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார்.
திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வந்த 4 டன் தங்கத்தை 3 ஆண்டுகளில் திருமலை தேவஸ்தானம் சேமித்து வைத்துள்ளனர்.
ஏழுமலையானுக்கு நன்கொடையாக சமர்ப்பித்து கிடைத்த 4டன் தங்கத்தை தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளின் டெபாசிட் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் தேவஸ்தான நிர்வாகம் வங்கிகளில் செய்துள்ள தங்க டிபாசிட்டின் அளவு 11 டன் 329 கிலோவாக உயர்ந்துள்ளது.
மேலும் நடப்பு நிதி ஆண்டில் மட்டும் தேவஸ்தான நிர்வாகம் 1131 கிலோ தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இது தவிர பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 18,000 கோடி பணத்தையும் தேவஸ்தான நிர்வாகம் நிரந்தர வைப்பு நிதியாக வைத்துள்ளது.
மேலும் தேவஸ்தானத்தின் அன்னதான அறக்கட்டளை, ஸ்ரீவாணி கோவில் நிர்மான அறக்கட்டளை ஆகியவை அறக்கட்டளைகள் பெயரிலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |