மூன்று தமிழக பெண்கள் கோடீஸ்வரர்களாகி சாதனை.. அவர்கள் தொடங்கிய தொழில் என்ன?
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் ரூ.5,000 முதலீட்டில் தொடங்கிய தொழில் தற்போது ரூ.7.5 கோடி அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது.
யார் அவர்கள்?
தமிழக மாவட்டமான திருப்பூரைச் சேர்ந்த சூர்ய பிரபா, சக்திபிரிய தர்ஷினி, காயத்ரி ஆகிய மூன்று பேரும் கல்லூரி நண்பர்கள். இவர்கள் திருமணத்திற்கு பிறகு தங்களுடைய குழந்தைகளுக்கு தூய்மையான பருத்தி ஆடைகளை தேடியுள்ளனர்.
ஆனால், குழந்தைகளின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஆடைகள் தான் கிடைத்தன. இதனால் அவர்கள், தங்களுடைய குழந்தைகளுக்கு பயன்படுத்த பருத்தி துணிகளை வாங்கி வடிவமைத்து தைத்தனர். இதுதான் இவர்களுக்கு தொழிலுக்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது.
இதில், காயத்ரி பேஷன் டெக்னாலஜி பயின்றவர்.இதனால், இவர் துணிகளை தைக்கும் பணியை தொடங்கினார். மற்ற இருவரும் பருத்தி துணியை வாங்குவது, கட் செய்வது போன்ற வேலையை செய்தனர். முதலில் இவர்கள் குழந்தைகளுக்கான தொட்டில், ஆடைகள் ஆகியவற்றை தயாரித்தனர்.
ரூ.5,000 TO ரூ.7.5 கோடி
கடந்த 2015 -ம் ஆண்டு சூர்ய பிரபாவின் வீட்டில் உள்ள சிறிய அறையில் தையல் இயந்திரத்தை கொண்டு ரூ.5,000 முதலீட்டில் பருத்தி துணிகளை வாங்கி தொழிலை ஆரம்பித்தனர். இவர்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் ஆடைகள், தொட்டில் என தயாரித்து விற்பனை செய்து வந்தனர்.
குறிப்பாக இவர்களின் பொருட்கள் தரமாக இருப்பது தான் Bee little வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது. தற்போது Bee little நிறுவனம் வைரா பேபி பொடிக் என்ற நிறுவனத்தின் Partnership நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த Bee little கடைகள் திருப்பூர், கோவை, சென்னை ஆகிய இடங்களில் உள்ளன. தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.7.5 கோடி ஆகும். முக்கியமாக Bee little நிறுவனத்தில் Global Organic Textile தரநிலை அளித்த பருத்தி துணிகளை பயன்படுத்தி ஆடைகளை தயாரிக்கின்றனர்.
2015 -ம் ஆண்டு தொழில் தொடங்கிய இவர்கள் 2016 -ம் ஆண்டு Bee little என்ற Facebook தளத்தை உருவாக்கினார். பின்னர், ரூ.50,000 முதலீடு செய்து கோவையில் 2018 -ம் ஆண்டு முதல் கடையை தொடங்கினர். இதனைத்தொடர்ந்து Bee little என்ற இணையதளத்தை உருவாக்கியதன் மூலம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |