திருவண்ணாமலை மட்டுமல்ல, பெரிய பெரிய மலைகளும் இனி காணாமல் போகும் - அதிர்ச்சியை கிளப்பிய அனுமோகன்
திருவண்ணாமலை மட்டுமல்ல, பெரிய பெரிய மலைகளும் இனி காணாமல் போகும் என அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவலை இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகரான அனுமோகன் கூறியுள்ளார்.
நிலச்சரிவில் நிலைகுலைந்த திருவண்ணாமலை
தமிழ்நாட்டின் கோயில் நகரமான திருவண்ணாமலையில் திங்கட்கிழமை பிற்பகல் இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டது.
முதலாவதாக ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் அண்ணாமலையார் மலையின் கீழ் சரிவு ஏற்பட்டது.
டிசம்பர் 1ஆம் திகதி மாலை 4 மணியளவில், திருவண்ணாமலை V.O.C.நகர் 11வது தெருவில் உள்ள ராஜ்குமார் வீட்டைத் திறக்க முயன்றபோது, பெரிய பாறாங்கல் மற்றும் மண் சரிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.
இதனால் வீட்டிற்குள் இருந்தவர்களால் வெளியில் வர முடியவில்லை என கூறப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 40 பேர் மீட்புப் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ராஜ்குமார், மீனா (27), ஆர்.கௌதம் (9), ஆர்.இனியா (5), எஸ்.ரம்யா (7), எம்.வினோதினி (14), எஸ்.மஹா (7) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது. பாலங்கள் நிரம்பி வழிகின்றன, கிராமங்கள் மற்றும் குடியிருப்பு தண்ணீரில் மூழ்கி காணப்படுகிறது. மேலும் ஏக்கர் அளவிலான பயிர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகரான அனுமோகன் பகிர் கிளப்பும் தகவலை கூறியுள்ளார்.
அதிர்ச்சியை கிளப்பிய அனுமோகன்
பள்ளம் மேடாகுவதும், மேடு பள்ளமாகுவதும் இயற்கை. இந்த ஆண்டின் ஆரம்பமான் இது; இன்னும் 30 வருடங்களில் இதைவிட அதிக பாதிப்பு ஏற்படும் என்றும், மலைப்பிரதேசத்தில் சற்று கவனமாக தான் இருக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் அரைவாசி புதையுண்டதாகவும் இதை விட அதிக பாதிப்பு ஏற்படும் என்று சித்தர் கனவில் கூறியதாகவும், நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று சம்பந்தப்பட்டவையை பயன்படுத்தி கோயிலை கட்டி அனைவரும் வழிபாடு செய்யுங்கள் என திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை நடிகருமாக அனுமோகன் நேர்காணல் மூலம் தெரிவித்துள்ளார்.
மேற்குதொடர்ச்சி மலை புதையுண்டால், கோவைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இவை அனைத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டும்மென்றால் இயற்கையை தான் வழிபட வேண்டும். இயற்கையால் மாத்திரமே இயற்கையால் வரும் பாதிப்பை தடுக்க முடியும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தை தங்களது மத ரீதியாக வழிபடுவதுண்டு. அதில் குறை சொல்ல முடியாது. ஆனால் உங்கள் வழிப்பாட்டின் ஒரு பகுதியாக பஞ்ச பூதங்களையும் சேர்த்து வழிபட வேண்டும். இதனால் வரவிருக்கும் பல பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |