10ஆம் வகுப்பு மாணவன் துஷ்பிரயோகம்: பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை
தமிழக மாவட்டம் திருவாரூரில் 10ஆம் வகுப்பு மாணவரை துஷ்பிரயோகம் செய்த பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று
கடந்த 2021ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை காணவில்லை என பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. 
அதன் அடிப்படையில் பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தியபோது லலிதா என்ற 38 வயது பெண் மாணவருடன் பழகி வந்தது தெரிய வந்தது.
அவர் நடனம் கற்றுத்தருவதாக கூறி, குறித்த மாணவரை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
54 ஆண்டுகள் சிறை
இதனைத் தொடர்ந்து மாணவர் மீட்கப்பட்டு, அப்பெண் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நடந்த இறுதி விசாரணையில் லலிதா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதனால் அவருக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.18,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவருக்கு அரசு ரூ.6 லட்சம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |