CM கிட்ட போய் சொல்லு ஒன்னும் பண்ண முடியாது - புகார் கொடுத்த மறுநாளே கொல்லப்பட்ட நபர்
tiruvottiyur youth murdered after day of complaint to police: காவல்நிலையத்தில் புகார் கொடுத்த மறுநாளே சென்னை திருவொற்றியூரை சேர்ந்த நபர் கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புகார் கொடுத்த மறுநாளே கொல்லப்பட்ட நபர்
சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்த 26 வயதான பிரதீப் ராஜ் என்பவரை நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் திருவொற்றியூர் காவலநிலையத்தில், சிலர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி குடும்பத்துடன் புகாரளித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து வெளியே வந்த பேட்டியளித்த அவர், " என் அம்மா, நவநீதம் என்பவரிடம் கடன் வாங்கியதால் என்னை அழைத்து சம்பந்தப்பட்டவர்கள் சில ரவுடிகளை வைத்து மிரட்டினார்கள்.
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் என்னை அழைத்து உங்களுக்குள் பகை இருக்கிறது. மாறி மாறி வெட்டிக் கொள்வீர்கள் என தகவல் வருகிறது என கூறினார்.
நான் சொன்னதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என கேட்டதற்கு, நீ என்ன பெரிய ஆளா, கை, கால்களை உடைத்து விடுவேன். உயிரோட இருக்க மாட்ட, உன்னை சுட்டு விடுவேன், உன்னை வெட்டி திருச்செந்தூரில் சென்று கரைப்பேன், பொய் வழக்குப் போட்டு கைது செய்வேன் என காவல் ஆய்வாளர் என்னை மிரட்டுகிறார்.
நான் எந்த தவறும் செய்யவில்லை என கூறினேன். பதிலுக்கு ரவுடி ராதாகிருஷ்ணனிடம் என்னைப் பேச சொன்னார்.
மேலும் நீ முதலமைச்சரிடம் வேண்டுமானாலும் போய் புகார் சொல்லிக்கொள். உனக்காக வரும் வழக்கறிஞரால் என்ன செய்ய முடியும். அவர்களால் நீதிமன்றத்தில் மட்டுமே பார்க்க முடியும். இது என் காவல் நிலையம்" என கூறியுள்ளார்.
காவல் ஆய்வாளர் மிரட்டியதாக புகார் அளித்த நபர் பேட்டியளித்த மறுநாளே கொல்லப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?
காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.
இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
— Udhay (@Udhaystalin) September 10, 2026
‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக…
தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |