பிரித்தானிய மகாராணியாரின் பட்டம் குட்டி இளவரசிக்கு... ஒருவருக்கு ஏமாற்றம்!
தன் தாயின் பட்டம் ஒன்றை தன் பேத்திக்கு வழங்க மன்னர் சார்லஸ் முடிவு செய்துள்ளார்.
குடும்பத்திலேயே மூத்த பட்டம் குட்டி இளவரசிக்கு
மன்னர் சார்லஸ், தனது தாயின் பட்டங்களில் ஒன்றான எடின்பர்க் கோமகள் என்னும் பட்டத்தை, தனது மூத்த மகனாகிய இளவரசர் வில்லியமுடைய மகள், குட்டி இளவரசி சார்லட்டுக்கு கொடுக்க விரும்புவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மன்னர் சார்லசின் தாயும் மறைந்த மகாராணியாருமான இரண்டாம் எலிசபெத், ராணியாக பதவியேற்கும் முன்வரை, அவரது கணவர் பிலிப் எடின்பர்க் கோமகன் என்றும், மகாராணியார் எடின்பர்க் கோமகள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.
தற்போது, இளவரசர் பிலிப்பும் மகாராணியாரும் மறைந்த நிலையில், அந்த பட்டம் யாருக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ராஜ குடும்பத்தில் பலருக்கும் இருந்தது.
இந்நிலையில், மகாராணியாரின் பட்டமாகிய எடின்பர்க் கோமகள் என்னும் பட்டத்தை, குட்டி இளவரசி சார்லட்டுக்கு வழங்க மன்னர் சார்லஸ் திட்டமிட்டுவருகிறார்.
தன் தாயை நினைவுகூரும் வகையிலும், அடுத்து அரியணை ஏறும் வரிசையில் இருக்கும் மூன்றாவது நபர் இளவரசி சார்லட் என்பதால் தங்கள் மரபை கௌரவிக்கும் வகையிலும் சார்லட்டுக்கு எடின்பர்க் கோமகள் பட்டம் வழங்கப்பட திட்டமிடப்பட்டு வருகிறது.
ஒருவருக்கு ஏமாற்றம்
ஆனால், இந்த செய்தி ராஜ குடும்பத்தில் ஒருவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், இளவரசர் பிலிப் இறந்த நேரத்திலிருந்தே, எடின்பர்க் கோமகன் என்ற பட்டம் தனக்குக் கிடைக்கும் என காத்திருந்தார் மன்னர் சார்லசின் இளைய தம்பியாகிய இளவரசர் எட்வர்ட்.
அவர் எடின்பர்க் கோமகனானால், அவரது மனைவி சோபி எடின்பர்க் கோமகள் ஆவார்.
ஆனால், இப்போது எடின்பர்க் கோமகள் என்ற பட்டம் குட்டி இளவரசி சார்லட்டுக்கு செல்ல இருப்பதால், எட்வர்ட் ஆவலுடன் காத்திருந்த எடின்பர்க் கோமகன் என்ற பட்டம் அவருக்கு கிடைக்காது என்பது அவருக்கு பெரும் ஏமாற்றம்தான்.
Credit: Getty