அச்சம் காரணமாக ராணி கமீலா ஏற்க மறுத்த ஒரு பட்டம்: பின்னணியில் ஒரு நீண்ட கதை
காதலிலும், திருமண வாழ்விலும், சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்காமல், தன் வாழ்வையும் சரியாக வாழாமல், இளவரசி டயானாவையும் வாழவிடாமல், வில்லி என்று பெயர் வாங்கியவர் கமீலா.
ரகசிய காதலியிலிருந்து ராணி வரை
இளவரசர் சார்லசின் ரகசிய காதலி என ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டவர் கமீலா. டயானா மறைந்து, கமீலாவும் தன் கணவரைப் பிரிந்த பின், 1999ஆம் ஆண்டு பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு சார்லசும் கமீலாவும் வெளியே வரும் காட்சி ஊடகங்களை எட்டியது.
Image: POOL/AFP via Getty Images
இருவரையும் சேர்த்துப் பார்த்தால் மக்கள் எப்படி ரியாக்ட் செய்வார்களோ என்ற அச்சம் சார்லசுக்கும் கமீலாவுக்கும் இருந்தது. ஆனால், மக்கள் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.
பின்னர், மெதுவாக பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் துவங்கினார் கமீலா. அடுத்து, இளவரசர் வில்லியமுடன் ஒரு சந்திப்பு. அதைத் தொடர்ந்து, மகாராணியாருடன் ஒரு சந்திப்பு என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, மகாராணியார் தன் வாயால், இனி கமீலாவை ராணி என அழைக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டு, இப்போது சார்லஸ் மன்னரானதால், ராணி என அழைக்கப்படுகிறார் கமீலா.
ஏற்க மறுத்த பட்டம்
சார்லஸ் டயானாவின் திருமண வாழ்வில் தலையிட்டதால் பிரித்தானிய மக்கள் கமீலா மீது எரிச்சலடைந்திருந்தார்கள்.
பின்னர், காலப்போக்கில் அந்த எரிச்சல் குறைந்திருந்தாலும், டயானா மீதான மக்களுடைய அன்பு குறித்து நன்றாகவே அறிந்துவைத்திருந்த கமீலா, தனக்கு முறைப்படி வரவேண்டிய பட்டம் ஒன்றை கடைசி வரை பயன்படுத்தாமலே விட்டுவிட்டார்.
Image: PA
ஆம், வேல்ஸ் இளவரசரான சார்லசை திருமணம் செய்ததால் கமீலா வேல்ஸ் இளவரசி ஆகவேண்டும். ஆனால், மக்கள் அந்த பட்டத்தை ஏற்கனவே இளவரசி டயானாவுக்குக் கொடுத்துவிட்டார்கள். அதை, தான் ஏற்றுக்கொண்டால், மக்களுடைய வெறுப்பு மேலும் அதிகமாகும் என்பதை நன்கறிந்த கமீலா, தன்னை வேல்ஸ் இளவரசி என அழைக்காமல், இளவரசர் சார்லசின் மற்றொரு பட்டமான கார்ன்வால் கோமகன் என்பதை பயன்படுத்தி, கார்ன்வால் கோமகள் என்றே அறியப்பட்டார்.
கடைசி வரை அவர் வேல்ஸ் இளவரசிஎன்னும் பட்டத்தை பயன்படுத்தவேயில்லை. இப்போது, இளவரசர் வில்லியம் வேல்ஸ் இளவரசர் ஆகியுள்ளதால், வேல்ஸ் இளவரசி என்னும் பட்டம் இளவரசி கேட்டுக்கு கிடைத்துள்ளது. அதைக் குறித்து மக்களுக்கு எந்த கவலையோ கோபமோ இல்லை. காரணம், மக்கள் இளவரசி கேட்டை அந்த அளவுக்கு நேசிக்கிறார்கள். எப்படியும், வேல்ஸ் இளவரசி என்ற பட்டம், இளவரசி டயானாவிடமிருந்து நேரடியாக அவரது மருமகளான இளவரசி கேட்டை வந்தடைந்துவிட்டது என்பது மட்டும் உண்மை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |