Job: ரூ. 56,000 சம்பளம்.., தமிழக விலங்கு நலவாரியத்தில் வேலைவாய்ப்பு
தமிழக விலங்குகள் நல வாரியம் (TNAWB) மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக தேவைப்படும் கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்
மாவட்ட விலங்கு நல அலுவலர் பதவிக்கு 38 மற்றும் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு 38 ஆகிய என மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
வயது வரம்பு
விலக்கு நல அலுவலர் பதவிக்கு 35 முதல் 55 வயது வரை மற்றும் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு 40 வயதிற்கு குறைவானவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
விலக்கு நல அலுவலர் பதவிக்கு கால்நடை அறிவியலில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு (B.V.Sc.) & AH அல்லது முதுகலை அறிவியல் பட்டப்படிப்பு (M.V.Sc.) முடித்திருக்க வேண்டும்.

கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு கால்நடை அறிவியலில் B.V.Sc & AH பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு கால்நடை கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
முன் அனுபவம்
விலக்கு நல அலுவலர் பதவிக்கு 10 ஆண்டுகள் வரை அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது.
கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டு விலங்குகள் பிறப்பு கட்டுபாடு சிகிச்சையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.56,000 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://tnawb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பங்கள் நவம்பர் 14ஆம் திகதிக்குள் அலுவலகத்தை சென்றடைய வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம்,
எண்.13/1, 3வது கடல் நோக்கு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை - 600 041.
அதிகாரபூர்வ அறிவிப்பு
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |