தேர்தல் அன்று ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐந்து மாநில தேர்தல் திகதிகளை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15ஆம் திகதி அறிவித்தது.
தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று, ஏப்ரல் 23 மற்றும் 29ஆம் திகதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
இதனிடையே, தேர்தல் நாளில் வாக்காளர்கள் சுலபமாக வாக்களிக்க அனைத்து மாநிலங்களிலும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களும் கட்டாயமாக விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |