என் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுறாங்க... நடிகர் சித்தார் வெளியிட்ட அதிர்ச்சி ஆதாரம்: எதற்காக தெரியுமா?
பிரபல திரைப்பட நடிகரான சித்தார்த்த சமீபத்தில் கொரோனா விஷயத்தில் பொய் சொன்னால் யாராக இருந்தாலும் அறை விழும் என்று கூறிய நிலையில், அவருக்கு பாலியல் மற்றும் கொலை மிரட்டல் போன்றவை எல்லாம் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா ருத்ரதாண்டம் ஆடி வருகிறது. அங்கு இதன் காரணமாக ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. இதன் காரணமாக, டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் முற்றிலும் தீர்ந்து விட்டதாகவும், இதனால் சிகிச்சைப் பலனிற்றி நோயாளிகள் இறந்ததாகவும் செய்திகள் வெளியானது.
அதன் பின், உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆக்சிஜன் இல்லை என்று பொய் கூறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இது மறைமுகமாக மருத்துவமனைகளை எச்சரிக்கும் வகையில் அவர் கூறியிருப்பதாக கூறப்பட்டது. இவரின் இந்த பேச்சுக்கு பதிலடி தரும் வகையில், நடிகர் சித்தார்த், சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், னிதராக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும், பொய் சொன்னால் அறை விழும் என்று கூறியிருந்தார்.
இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவ்வளவு தைரியமாக பேச ஒரு தைரியம் வேண்டும் என்று புகழ்ந்து வந்தனர்.
My phone number was leaked by members of TN BJP and @BJPtnITcell
— Siddharth (@Actor_Siddharth) April 29, 2021
Over 500 calls of abuse, rape and death threats to me & family for over 24 hrs. All numbers recorded (with BJP links and DPs) and handing over to Police.
I will not shut up. Keep trying.@narendramodi @AmitShah
இந்நிலையில், சித்தார்த்த சற்று முன்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய போன் நம்பர் எப்படியோ தமிழ்நாடு பாரதிய ஜனதா உறுப்பினர்களிடம் லீக் ஆகிவிட்டது. அதை வைத்து அவர்கள் கொலை செய்துவிடோம், பாலியல் மிரட்டல் என தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், இதுவரை 500-க்கும் மேற்பட்ட முறை போன் கால்கள் வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், இதை எல்லாம் நான் காவல்நிலையத்தில் சமர்பிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அது தொடர்பான ஆதாரத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
This is one of many social media posts by BJP TN members leaking my number yesterday and telling people to attack and harass me.
— Siddharth (@Actor_Siddharth) April 29, 2021
"Ivan inimela vaaye thirakka koodathu" (this fellow must never open his mouth again)
We might survive Covid. Will we survive these people? pic.twitter.com/dYOQMsEewi