மீண்டும் அமைச்சரானார் செந்தில் பாலாஜி! மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறை ஒதுக்கீடு
தமிழ்நாட்டின் மாற்றியமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
மீண்டும் அமைச்சரானார் செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டின் அமைச்சரவை மாற்றுதலுக்கு நேற்று ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில், இன்று ஆளுநர் மாளிக்கையில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டு வருகின்றனர்.
இதில், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜிக்கு தமிழக அமைச்சரவையில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி மீண்டும் தமிழகத்தின் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மீண்டும் இடம்பெற்றுள்ள செந்தில் பாலாஜி 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் இருந்து உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற அமைச்சர்களும் பொறுப்பேற்பு
On the recommendation of Tamil Nadu CM MK Stalin, Governor RN Ravi has approved the portfolios allotted to the newly inducted ministers V Senthilbalaji, Dr Govi Chezhiaan, R Rajendran and SM Nasar. pic.twitter.com/amfZtquSkB
— ANI (@ANI) September 29, 2024
செந்தில் பாலாஜியை தொடர்ந்து கோவி செழியன் - உயர்கல்வித் துறை அமைச்சராகவும், ஆர்.ராஜேந்திரன் - சுற்றுலாத் துறை அமைச்சராகவும், ச.மு. நாசர் - சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி முறைப்படி பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |