தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரிசையில் நின்று வாக்குப்பதிவு! மக்களவை தேர்தல் விறுவிறுப்பு
தமிழக மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் இந்திய மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
இந்திய மக்களவை தேர்தல் ஆரம்பம்
இந்தியாவின் 18வது மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது.
தமிழகத்தை பொறுத்தவரை 39 மக்களவை தொகுதிகளில், 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகள், மற்ற 19 மாநிலங்களில் உள்ள 62 தொகுதிகளும் சேர்த்து மொத்தம் 102 தொகுதிகளுக்கு மக்களவை முதல் கட்ட தேர்தலானது நடைபெறுகிறது.
நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!
— M.K.Stalin (@mkstalin) April 19, 2024
அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்!
நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்...#Elections2024 pic.twitter.com/bDgIHTmjpN
இன்று தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு சட்டப்பேரவை இடைத் தேர்தலும் நடைபெறுகிறது.
அதிகாலை 7 மணிக்கு தொடங்கியுள்ள இந்த தேர்தல் வாக்குப் பதிவானது மாலை 6 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணி வரை காத்திருக்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க. ஸ்டாலின் வாக்குப்பதிவு
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பொதுமக்கள் வாக்களிக்க காத்திருந்த நிலையில், M.K ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தனர்.
VIDEO | Tamil Nadu CM MK Stalin (@mkstalin) speaks to the media after casting his vote at a polling booth in #Chennai.#LSPolls2024WithPTI #LokSabhaElections2024
— Press Trust of India (@PTI_News) April 19, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/aAuncbfdqO
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |