தமிழகத்தை உலுக்கிய விஷ சாராய மரணம்! 33 பேர் பலி..முதல்வர் அவசர ஆலோசனை
தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியின் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் பலர் சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர்.
அவர்களில் பலருக்கு நள்ளிரவில் கண் எரிச்சல், வயிற்று வலி ஏற்பட உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கருணாபுரத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், காவல்துறை டி.ஜி.பி, உளவுத்துறை டி.ஜி.பி, மதுவிலக்கு உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |