இறப்பு எண்ணிக்கை 36-ஆக உயர்வு - த.வெ.க விஜய் மீது FIR பதிவு
கரூரில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36-ஆகி உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெறிவிக்கின்றன.
50-க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது பொலிஸார் FIR பதிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிசாரின் கூற்றுப்படி, காலை 7 மணி முதல் குறைந்தது 30,000 முதல் 35,000 பேர் வரை அந்த இடத்தில் காத்திருந்தனர்.
10,000 கூட்டுவதற்காக மட்டுமே கட்சி பொலிசாரின் அனுமதியை கோரியது. நண்பகல் 12 மணிக்கு விஜய் வருவதாக இருந்தது, ஆனால் இரவு 7 மணிக்குத்தான் அந்த இடத்தை அடைந்தார்.
நாமக்கல்லில் இருந்து சுமார் 5,000 கட்சி தொண்டர்கள் விஜயை பின்தொடர்ந்து கரூர் வந்தனர்.
நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, விஜய் தனது உரையை நிகழ்த்த திட்டமிடப்பட்ட வேலுச்சாமிபுரத்தை அடையும் வரை நகர இடமில்லாத அளவிற்கு கூட்டம் அதிகரித்தது.
சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தவர்களை மீட்க அம்புலன்ஸ் வந்த நிலையில், விஜய் தனது பேச்சை இரண்டு முறை நிறுத்தினார். கூட்ட நெரிசல் ஏற்பட்டதையடுத்தது பொலிஸார் தடியடி நடத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |