தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியானது!
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பொறுப்பேற்கவுள்ள நிலையில் அமைச்சரவை பட்டியில் வெளியாகியுள்ளது.
கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உள்ள திறந்த வெளியில் அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சி நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
நாளை நடைபெறும் பதவி ஏற்பு நிகழ்ச்சியல் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுடன் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள்.
மு.க.ஸ்டாலின்- முதலமைச்சர்,
துரைமுருகன் - நீர்வளத் துறை அமைச்சர்,
கே.என்.நேரு - நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்,
இ.பெரியசாமி - கூட்டுறவுத் துறை அமைச்சர்,
க.பொன்முடி - உயர்கல்வித் துறை அமைச்சர்,
எ.வ.வேலு - பொதுப்பணித் துறை அமைச்சர்.
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வரம் - வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்,
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்,
தங்கம் தென்னரசு - தொழில்துறை அமைச்சர்,
எஸ்.இரகுபதி - சட்டத் துறை அமைச்சர்.
சு.முத்துசாமி - வீட்டு வசதித்துறை அமைச்சர்
கே.ஆர்.பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சி துறைத் அமைச்சர்.
தா.மே.அன்பரசன் - ஊரகத் தொழிற் துறை அமைச்சர்.
மு.பெ.சாமிநாதன் - செய்தித் துறை அமைச்சர்.
பி.கீதா ஜீவன் - சமூக நலன் மற்றும் மக்கள் உரிமைத் துறை அமைச்சர்,.
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் - மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்,.
ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத் துறை அமைச்சர்.
கா.ராமச்சந்திரன் - வனத்துறைத் அமைச்சர்.
அர.சக்கரபாணி - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்.
வி.செந்தில் பாலாஜி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்.
ஆர்.காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.
மா.சுப்பிரமணியன் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.
பி.மூர்த்தி - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.
எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்.
பி.கே.சேகர்பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர்.
பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை.
சா.மு.நாசர் - பால்வளத் துறை அமைச்சர்.
கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.
சிவ.வீ.மெய்யநாதன் - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்.
சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்.
த.மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்.
மா.மதிவேந்தன் - சுற்றுசலத்துறை அமைச்சர்.
என்.கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்.
— Prakash PN (@mannan_prakash) May 6, 2021