திருவள்ளுவர் தினத்தன்று தமிழக அரசு வழங்கும் விருதுகள் அறிவிப்பு.., யார் யாருக்கு தெரியுமா?
திருவள்ளூவர் தினத்தில் வழங்கப்படவுள்ள விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
யார் யாருக்கு விருது?
2025 ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது புலவர் மு.படிக்கராமுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரனுக்கு 2024ஆம் ஆண்டிற்கான பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விசிக நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் ரவிக்குமாருக்கு 2024ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பேரறிஞர் அண்ணா விருதுக்கு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த எல்.கணேசன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் விருதுக்காக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிறப்பு உதவியாளராக பணியாற்றிய முத்து வாவாசியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான கபிலனுக்கு மகாகவி பாரதியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்.செல்வகணபதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்துக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |