தீபாவளி பண்டிகைக்கு மறுநாளும் விடுமுறை- தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் பொதுவிடுமுறை அளிப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை
நாடு முழுவதும் முக்கிய பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், இந்த வருடம் அக்டோபர் 31 ஆம் திகதி (வியாழக்கிழமை) அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
இந்த பண்டிகையை பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்களுடன் சிறப்பாக கொண்டாடுவர்.
ஒரு நாள் மட்டும் விடுமுறை என்பதால், அடுத்த நாள் உடனடியாக ஊர் திரும்பும்போது மக்கள் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுவர்.
இந்நிலையில் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 1ஆம் திகதி அன்று பொதுவிடுமுறை என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
வெளியிட்ட அறிக்கை
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாகவும் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |