தமிழக ஆளுநர் அர்லேகர் மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, கேரள ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 6 மாதங்களாக பொறுப்பு ஆளுநராகச் செயல்பட்டு வந்த அவர், கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆளுநர் அர்லேகர் நேற்று மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |