நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்து போடமாட்டேன்: ஆளுநர்
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களை சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மாணவ மாணவிகளை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கப்பட்டது.
சேலத்தை சேர்ந்த பெற்றோர் ஒருவர் கவர்னரிடம் ஏன் நீங்கள் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்து போடாமல் இருக்கிறீர்களே? என்று கேட்டார்.
கவர்னர் கூறிய பதில்
அதற்கு கவர்னர் ஆர்.என் ரவி நீட் விலக்கு மசோதாவில் எந்த காலத்திலும் நான் கையெழுத்து போட மாட்டேன். நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதால் மாணவர்களின் போட்டி போடும் திறன் கேள்விக்குறியாகிவிடுகின்றன.
நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டிய அவசியம் இல்லை . மேலும் நீட் குறித்த தவறான புரிதல் இந்த மாநிலத்தில் உள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் நீட் தொடர்பான தற்கொலைகள் பற்றி கேள்விப்படவில்லை. அதற்கு முன்பு எந்த மாணவர் இறந்தாலும் நீட் தேர்வு தான் காரணம் என தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பயிற்சி மையத்தில் படித்தால் தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதெல்லாம் போலியானது.
நீட் தேர்வு வந்த பிறகு ஏழை, எளிய, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நீட் தேர்விற்கு முன்பு ரூ.1000 கோடி வியாபாரமாக மருத்துவ படிப்பு இருந்தது. இன்று நிலைமை மாறி மருத்து ஊழலை நீட் தேர்வு தடுத்துள்ளது.
தேசத்திற்கு நீட் தேர்வு கண்டிப்பாக தேவை. பல ஆயிரம் கோடி ஊழல் நிறைந்த மருத்துவ படிப்பை ஊழல் இல்லாததாக நீட் மாற்றி உள்ளது.என்று அவர் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் முன்னிலையில் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |