தீபாவளியன்று எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும்? தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு
tami lnadu govt fix time limit for burst crackers on diwali: தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு
வரும் நவம்பர் 8 ஆம் திகதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று, புத்தாடை உடுத்தி, குடும்படுத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடுவர்.

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், சொந்த ஊர்களுக்குச் செல்வோரின் வசதிக்காக நவம்பர் 9ஆம் திகதியும் தமிழ்நாடு அரசு, அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.
அதேவேளையில், பட்டாசு வெடிப்பதற்கான நேரக்கட்டுப்பாட்டை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்கள், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.