தீபாவளி பண்டிகையொட்டி 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு- தமிழக அரசு
தீபாவளி பண்டிகையொட்டி பொதுமக்களுக்கு தமிழக அரசின் 10 பொருட்கள் அடங்கிய தொகுப்பு கூட்டுறவுத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மளிகை தொகுப்பு
கூட்டுறவு அங்காடிகளில் 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.200க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த திட்டம் சென்னையில் நாளை தொடங்கி வைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
கூட்டுறவு அங்காடிகள் மூலம் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை வழங்கும் நோக்கில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த மளிகைத் தொகுப்பில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு, சீரகம், சோம்பு ஆகிய 10 பொருட்கள் இடம்பெறும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |