Jobs: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் ஆளுமை சங்கத்தின் மாவட்ட மேலாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், நாமக்கல், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள மின் மாவட்ட மேலாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BE, BTech கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவில் படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும், 10 மற்றும் 12ம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.
கடந்த ஜூலை 1ம் தேதி நிலையில் 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும், ஆன்லைன் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இந்த பணிக்கு மாதம் 23,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி காலம் ஓராண்டு மட்டுமே, அதன்பின் வேலையை பொறுத்து இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் அல்லது https://tnegaedm.onlineregistrationform.org/TEG/ என்ற இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி- செப்டம்பர் 11, 2023