பல சிறுபிள்ளைகளின் உயிரை பலிவாங்கிய இருமல் மருந்து: தமிழக அரசின் முடிவு
மத்தியப்பிரதேசத்தில் 20க்கும் மேற்பட்ட சிறுபிள்ளைகள் உயிரிழக்கக் காரணமாக அமைந்த இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அந்நிறுவனத்தை மூடவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பல சிறுபிள்ளைகளின் உயிரை பலிவாங்கிய இருமல் மருந்து
மத்தியப்பிரதேசத்தில், Coldrif என்னும் இருமல் மருந்தை உட்கொண்ட 20க்கும் மேற்பட்ட சிறுபிள்ளைகள் உயிரிழந்தார்கள்.
அந்த மருந்தை ஆய்வுக்குட்படுத்தியதில், அதில் அனுமதிக்கப்பட்டதற்கும் மிக அதிக அளவில் டை எத்திலீன் கிளைக்கால் (DEG) என்னும் ரசாயனம் கலந்துள்ளது தெரியவந்தது.
இந்த DEG என்பது, சாயமிடுதல் மற்றும் அச்சிடல் முதலான துறைகளில் பயன்படுத்தப்படும், நிறமோ மணமோ அற்ற, இனிப்புச் சுவை கொண்ட, நச்சுத்தன்மை கொண்ட ரசாயனமாகும்.
சிறுபிள்ளைகள் அதை உட்கொண்டால், அவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு முதல் மரணம் வரை ஏற்படலாம்.
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ள Sresan Pharmaceuticals என்னும் நிறுவனமே இந்த Coldrif என்னும் இருமல் மருந்தை தயாரித்துள்ளது.
நிறுவனம் மூடல்
இந்த விடயம் வெளியானதைத் தொடர்ந்து, Sresan Pharmaceuticals நிறுவனத்தின் உரிமையாளரான ராஜா ரங்கநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், Sresan Pharmaceuticals நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மருந்துகள் தயாரிக்கும் உரிமத்தை ரத்து செய்துள்ள தமிழ்நாடு அரசு, உடனடியாக அந்நிறுவனத்தை மூடவும் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |