அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு.., பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது.
இதில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவுள்ள நிலையில் அரையாண்டு தேர்வு முக்கியமானதாக உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் தொடங்கப்படும்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை, அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் திகதி முதல் தொடங்கி டிசம்பர் 23ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.

இதில், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் திகதி தேர்வு தொடங்கி 23ஆம் திகதி நிறைவடைகிறது.

அதேபோல், 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் டிசம்பர் 15ஆம் திகதி தேர்வு தொடங்கி 23ஆம் திகதி நிறைவடைகிறது.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 23ஆம் திகதி அரையாண்டு தேர்வு நிறைவு பெறுகிறது.

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் திகதி தொடங்கும் அரையாண்டு தேர்வு டிசம்பர் 23ஆம் திகதி நிறைவு பெறுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |