தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் திகதி.., இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் திகதி இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது.
இந்த 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தேவையான பணிகளை மேற்கொண்டுள்ளது.
சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் இறந்தவர்கள், இரட்டை பெயர்கள் மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டு புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மேலும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் நேரில் சென்று தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தது.
மேலும், தேர்தல் ஏற்பாடு பணிகள் குறித்து தலைமை செயலாளர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட உடன் இன்று மாலையே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |