ஹாக்கி அணி கேப்டன்களுடன் வேட்டி சட்டையில் தமிழக அமைச்சர்!
இந்திய மாநிலம் தமிழகத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 6 ஹாக்கி அணி கேப்டன்களுடன் வேட்டி சட்டையில் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி
தமிழகத்தின் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஏழாவது ஆசிய ஹாக்கி சாம்பியன் டிராபி தொடர் நடந்து வருகிறது. இந்த தொடருக்காக சுமார் மூன்றரை கோடி ரூபாய் அளவில் ராதாகிருஷ்ணன் மைதானம் புனரமைக்கப்பட்டது.
இந்த போட்டியில், கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் விளையாடுகின்றன.
இதில், முதல் போட்டியில் இந்தியா மற்றும் சீன அணிகள் களமிறங்கின. இதில் இந்தியா சிறப்பாக விளையாடி 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.
இதனையடுத்து ஒவ்வொரு அணியும் தலா 4 ஆட்டங்கள் என விளையாடிவிட்டன. மேலும், இந்தியா 10 புள்ளிகளுடன், மலேசியா 9 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
சீனா, அடுத்த சுற்று விளையாடுவதற்கான வாய்ப்பை இழந்து விட்டது. மீதமுள்ள 3 அணிகள் இரண்டாவது இடத்துக்கான போட்டியில் உள்ளன.
வேட்டி சட்டையில் உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில், ஓய்வு நாளான நேற்று அனைத்து ஹாக்கி கேப்டன்களுக்கும் போட்டோஷூட் நடத்தப்பட்டது.
அப்போது, கேப்டன்கள் 6 பேரும் தமிழ் பாரம்பரியமான வேட்டி சட்டையில் வந்து ராதாகிருஷ்னன் மைதானத்தில் காத்திருந்தனர்.
பின்பு, இரவு 7.30 மணி அளவில் மைதானத்திற்கு வேட்டி சட்டையில் வந்த அமைச்சர் உதயநிதி கேப்டன்களுடன் கைகுலுக்கி வரவேற்றார்.
இதனையடுத்து, மைதானத்தில் ஹாக்கி வெற்றிக் கோப்பையுடன் அனைத்து கேப்டன்களுடன் அமைச்சர் உதயநிதி புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்பு, அவர்களுடன் சேர்ந்து சிற்றுண்டி அருந்திவிட்டு கிளம்பி சென்றார்.
தற்போது, தமிழக அமைச்சர் உதயநிதி எடுத்த இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
சென்னையில் #AsianChampionsTrophy ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்போட்டியில் பங்கேற்றுள்ள இந்தியா , பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், கொரியா மற்றும் சீனா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த அணிகளின் கேப்டன்களை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் இன்று சந்தித்து… pic.twitter.com/9B12XNxv8O
— Udhay (@Udhaystalin) August 8, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |