Job: ரூ.1,77,500 சம்பளம்.., தமிழக மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு
மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டது.
காலிப்பணியிடங்கள்
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Medical Officer பணிக்கென 29 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வி தகுதி
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BAMS / BSMS / BUMS / MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 22 ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் Tamil Language Eligibility Test / Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.03.2025ஆம் திகதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |