19 ஆண்டுகளுக்கு பிறகு AI உதவியுடன் கொலையாளியை கைது செய்த தமிழ்நாடு பொலிஸார்

Tamil nadu India Crime Artificial Intelligence
By Thiru Sep 21, 2026 12:46 AM GMT
Report

TN Police Use AI to Arrest 19 years absconding Accused: கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தலைமறைவான நபரை நவீன AI உதவியுடன் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்து பொலிஸார் அசத்தியுள்ளனர்.

தலைமறைவான குற்றவாளி

2007ம் ஆண்டு சென்னை திருவொற்றியூர் பகுதியில் பாண்டியமணி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா(அப்போது வயது 20) உட்பட 5 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஷேக் அப்துல்லா பொலிஸாரின் கண்களுக்கு சிக்காமல் தலைமறைவானார்.

19 ஆண்டுகளுக்கு பிறகு AI உதவியுடன் கொலையாளியை கைது செய்த தமிழ்நாடு பொலிஸார் | Tn Police Use Ai To Arrest Absconding Accused

இந்நிலையில் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்ட நிலையில் தனிப்படை பொலிஸார் 2007ம் ஆண்டு ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.

AI உதவியுடன் அசத்திய பொலிஸார்

கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவர் தற்போது எப்படி இருப்பார் என்பதை ஊகிக்க, பொலிஸார் நவீன ஏஐ உருவ அமைப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.

தொழில்நுட்ப உதவியுடன் தற்போது 39 வயதில் இருக்கும் ஷேக் அப்துல்லாவின் உருவ தோற்றத்தை பொலிஸார் இறுதி செய்தனர்.

இதையடுத்து அந்த புகைப்படங்களை வைத்து சமூக வலைதள கணக்குகள் மற்றும் அவர் முன்பு வசித்த பகுதியில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இறுதியில் 39 வயதான ஷேக் அப்துல்லா திருமுல்லைவாயில் சோழம்பேடு மெயின் ரோடு பகுதியில் தன்னுடைய குடும்பத்தினருடன் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

பிறகு திருமுல்லைவாயல் பகுதியில் முகாமிட்ட தனிப்படை பொலிஸார் நேற்று முன்தினம் ஷேக் அப்துல்லாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

 பின்னர் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷேக் அப்துல்லா, நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நவீன AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் 19 ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவான குற்றவாளியை பொலிஸார் கைது செய்து இருப்பது பாராட்டுதலை பெற்று வருகிறது.

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US