Job: ரூ. 70,000 வரை சம்பளம்.., தமிழ்நாடு அச்சுத்துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் பல்வேறு அச்சகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள்
உதவி ஆப்டெட் மிஷின் டெக்னீஷியன் - 19 ஜூனியர் எலெக்ட்ரிஷியன் - 14 ஜூனியர் மெக்கானிக் - 22 பிளம்பர் கம் எலெக்ட்ரீஷியன்- 1 வயதுவரம்பு இப்பதவிக்கு
வயதுவரம்பு
விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஜூலை 1ஆம் திகதியின்படி, 18 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பின்னர் அந்தந்த பதவிக்கு ஏற்ப தொழில்நுட்பப்படிப்பில் டிப்ளமோ/ ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவி ஆப்செட் மிஷின் டெக்னீஷியன் பதவிக்கு மட்டும் டிப்ளமோ உடன் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்
அச்சுத்துறையின் கீழ் நிரப்பப்படும் இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 8 கீழ் ரூ.19,500 - ரூ.71,900 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியுள்ளவர்கள் https://www.stationeryprinting.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி
ஆணையர், தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம், எண் - 110, அண்ணா சாலை, சென்னை - 2.
விண்ணப்பிக்க கடைசி நாள்
இப்பணிக்கு விண்ணப்பிக்க 19.09.2025 அன்று மாலை 5.30 மணி வரையே கடைசி நாள் ஆகும். அதற்குள் விண்ணப்பம் அலுவலகத்தை சென்றடையும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுவதால், எழுத்துத் தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் நபர்களின் தகுதி அடிப்படையில் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் நியமிக்கப்படுவார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |