தமிழக சிறைத் துறை டிஜிபி இடமாற்றம்- அரசு உத்தரவு
சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரை, தமிழ்நாடு மின்வாரிய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சிறைத் துறை டிஜிபி மாற்றம்
தமிழக சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, புதிய சிறைத் துறை டிஜிபியாக சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது சந்தீப் ராய் ரத்தோர் மின்வாரிய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்ட சிறையில் இருந்து கடந்த 26ஆம் தேதி இரவு போலீஸாரை தாக்கி 17 பேர் தப்பியோடினர்.
அதேபோல புழல் சிறையில் இருந்தும் சில நாட்களுக்கு முன்பு இரு கைதிகள் தப்பியோடினர்.
இந்த இரு சம்பவங்களையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்ற நிலையில், தற்போது சிறைத் துறை டிஜிபி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |