பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் +2, 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை மறுதினம் முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும்.
அரசுத் தேர்வுகள் துறை, பொதுத்தேர்வுகளை நடத்த ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான கேள்விகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை மற்றும் தொலைபேசி எண்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பொதுத் தேர்வுகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை இயங்கும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறையை 9498383075, 9498383076 என்ற செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வுகள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை இந்நேரத்தில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |