தெரு நாய் தாக்குதல்.., பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுரை
தமிழக மாணவர்கள் தெருநாய் தாக்குதலிலிருந்து பாதுகாப்பாக இருக்க புதிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அறிவுரை
சமீப காலமாக தெருநாய் தாக்குதல் அதிகரித்து வருவதால், பள்ளி சுற்றுப்புறங்களின் பாதுகாப்பு கண்காணிப்பு அவசியமாகியுள்ளது.
அந்தவகையில், பள்ளிகளில் நடைபெறும் காலை கூட்டங்களில் ரேபிஸ் விழிப்புணர்வு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மேலும், வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களில் எடுத்துரைக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் தெருநாய்களுடன் விளையாடுவது, உணவு கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க பள்ளிகள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
பள்ளி வளாகத்தைச் சுற்றி தெருநாய்கள் இருந்தால், உடனடியாக உள்ளாட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க பள்ளிகள் பொறுப்பேற்க வேண்டும்.
இதற்காக ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, அவரின் விவரங்கள் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட வேண்டும்.
மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |