தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (நவ.26) வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.26) அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி, காரைக்காலில் அதி கனமழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |