Job: ரூ. 90,000 சம்பளம்.., இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்
Medical Officer, Staff Nurse பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / DGNM (Diploma in General Nursing Midwives) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.14,000/- முதல் ரூ.90,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், 12.07.2025ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Notification PDF
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |