Job: TNPL நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்டில் (TNPL) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பானது கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
காலிப்பணியிடங்கள்
Executive Director (Operation) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி
இந்த பணிக்கு Engineering, Science பாடப்பிரிவில் BE, B.Tech, Post Graduate Diploma தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
வயது வரம்பு
01.02.2024 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் 57 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
முன் அனுபவம்
விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 3 - 32 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
மாத ஊதியம்
பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு TNPL நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
20.03.2024-ம் திகதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |