TNPSC Group 4 2024: தேர்வு தேதி, காலி பணியிடங்கள் விவரம் குறித்த முழு தகவல்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், 2024 ஆண்டில் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
காலி பணியிடங்கள்
கிராமாக நிர்வாக அலுவலகர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், ஆய்வக உதவியாளர், வனக்காவலர் உள்ளிட்ட 32 பதவிகளுக்கான 6244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு
விண்ணப்பிக்கும் தேர்வாளர்கள் 01.07.2024 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்
- இணையவழி விண்ணப்பங்கள் தொடங்கும் நாள்- 30.01.2024
- விண்ணப்பங்கள் சமப்பிப்பதற்கான கடைசி தேதி- 28.02.2024 - 11.59 மணிக்குள்
- விண்ணப்பம் திருத்தும் காலம்- 04.03.2024 - 06.03.2024
- தேர்வு நாள்- 09.06.2024- 9.30 மணி
விண்ணப்பிக்கும் முறை
அதற்கான விண்ணப்பங்கள் (30.01.2024) இன்று முதல் தொடங்குகிறது. விண்ணப்பங்கள் Online வழியே மட்டும் அனுப்பப்பட வேண்டும்.
இதற்காக விண்ணப்பிக்க, www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிவுறுத்தல்களை நன்றாக படித்து, தேர்வுக்கான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்கிறோம் என உறுதி செய்த பின்னர் விண்ணப்பிக்கவும்.
தேர்வு முறை
3 மணிநேரம் நடைபெறும் தேர்வானது 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 10-ம் வகுப்பு அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும்.
பகுதி ஏ-யில் 100 கேள்விகள் (150 மதிப்பெண்கள்) தமிழ் பாடத்தில் கேட்கப்படும்.
பகுதி பி-யில் பொது படிப்புகள் (75 கேள்விகள்), ஆப்டிடியூட் தேர்வு (25 கேள்விகள்) நடத்தப்படும். இதற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். 200 கேள்விகள் இடம் பெறும்.
முழு விவரங்களுக்கு TNPSC அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |