பிரித்தானியா மக்களின் அனுதாபங்கள் யாருக்கு? ஹரி-மேகனுக்கா... மகாராணி-அரச குடும்பத்தினருக்கா? வெளியானது கருத்து கணிப்பு முடிவு
ஓபராவுடனான இளவரசர் ஹரி-மேகன் தம்பதியின் நேர்காணல் குறித்த பிரித்தானியா மக்கன் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.
Oprah Winfrey உடனான இளவரசர் ஹரி-மேகன் தம்பதியின் நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை மாலை சிபிஎஸ் என்ற அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
நேர்காணலில் அரச குடும்பம் குறித்து இளவரசர் ஹரியின் மனைவி மேகன் சரமாரியாக குற்றம்சாட்டியது சர்ச்சயை கிளப்பியுள்ளது.
இந்த நிகழ்ச்சி பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் முழுமையாக ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர் பிரிட்டிஷ் சர்வதேச இணைய அடிப்படையிலான சந்தை ஆராய்ச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனமான YouGov, பிரித்தானியா மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தியது.
தற்போதைய சூழலில் இந்த நேர்காணல் தேவையானதா அல்லது தேவையற்றதா, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று மக்களிடம் கேட்கப்பட்டதற்கு, 47% பேர் இது தேவையற்றது என்றும் 21% பேர் இது தேவையானது என்றும் 31% பேர் தெரியாது என்றும் கூறியுள்ளனர்.
ஹரி மற்றும் மேகன் மீது அவர்களுக்கு எவ்வளவு அனுதாபம் இருக்கிறது என்றும் மக்களிடம் கேட்கப்பட்டதற்கு, அதிகமாக என 12%, நடுநிலை என 17% , அதிகம் இல்லை என 23%, இல்லவே இல்லை என 33%, தெரியாது என 15% பேரும் தெரிவித்துள்ளனர்.
அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் மீது அவர்களுக்கு எவ்வளவு அனுதாபம் இருக்கிறது என்று கேட்கப்பட்டதற்கு, அதிகமாக என 16%, நடுநிலை என 25% , அதிகம் இல்லை என 25%, இல்லவே இல்லை என 20%, தெரியாது என 16% பேரும் தெரிவித்துள்ளனர்.