முன்னாள் மனைவியின் திருமணத்தை வழிநடத்திய ஸ்பைடர்மேன் ஹீரோ: வைரலாகும் புகைப்படங்கள்
Tobey maguire stood front his ex wife marriage: பிரபல ஹாலிவுட் நடிகர் டோபி மாகுவேர், தனது முன்னாள் மனைவியின் திருமணத்தை முன்னின்று வழி நடத்தியது பேசுபொருளாகியுள்ளது.
ஸ்பைடர்மேன் புகழ் நடிகர் டோபி மாகுவேர், தனது முன்னாள் மனைவியின் திருமணத்தை முன்னின்று வழி நடத்திய புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
டோபி மாகுவேர்
ஹாலிவுட்டில் ஸ்பைடர்மேன் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் டோபி மாகுவேர் (Tobey Maguire). 51 வயதாகும் இவர், கடந்த 2020-ஆம் ஆண்டில் தனது மனைவி ஜெனிஃபர் மேயரை பிரிந்தார்.
இந்த தம்பதிக்கு 19 மற்றும் 17 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், ஜெனிஃபர் மேயர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இசை நிர்வாகி ஜியோஃப்ரே ஓகுன்லேஸி என்பவருக்கும், ஜெனிஃபர் மேயருக்கும் கடந்த 10ஆம் திகதி திருமணம் நடந்தது.
இந்த திருமண விழாவில் டோபி மாகுவேர் கலந்துகொண்டு முன்னின்று வழி நடத்தியதுதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஹவாயில் திருமணம்
ஹவாயில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ரிசார்ட் லனாயில் நடைபெற்ற திருமண விழாவில் டோபி நடத்தி வைக்க, லியோனார்டோ டிகாப்ரியோ உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
டோபியும், நகை வடிவமைப்பாளரான அவரை முன்னாள் மனைவி ஜெனிஃபரும் பிரிந்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் விவகாரத்தை இறுதிசெய்து மூன்று வாரங்களுக்குள் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது.
தனது முன்னாள் மனைவியின் திருமண விழாவில் கலந்துகொண்டதுடன், அதனை முன்னின்று டோபி வழி நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
