இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து இன்றுடன் 4 வருடங்கள்
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் பல நகரங்களில் குண்டு தாக்குதல் இடம்பெற்றது என்பது யாரும் அறிந்ததே.
இலங்கையின் தலைநகரமான கொழும்பில் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் முதல் குண்டு வெடிப்பு நடந்தது. அதை தொடர்ந்து 3 நட்சத்திர விடுதி மற்றும் மட்டக்களப்பு என பல இடங்களில் குண்டு வெடித்தன.
பாதிக்கப்பட்டவர்கள்
ஈஸ்டர் பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் 359 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
பல குழந்தைகள் பெற்றோர்களை இழந்து கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த கொடூரம் நடந்து இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றது.
இன்றுடன் 4 வருடங்கள்
இதைத்தொடர்ந்து இலங்கையின் பல இடங்களில் வெள்ளை மற்றும் கறுப்பு ஆடைகள் அணிந்து பேரணி இடம்பெற்று வருகின்றது.
மேலும், பல தேவாலயங்கள் மற்றும் சமய இடங்களில் ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்.