திடீரென எகிறிய தங்கம் விலை.., இன்றைய நிலவரம் என்ன? (23-11-2026)
Gold and Silver Price | இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய தங்க நிலவரம்
நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது.
கடந்த 16 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.15,360 வரை குறைந்ததால், நகை வாங்க காத்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
கடந்த நவம்பர் 21ஆம் திகதி 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.11,465க்கும், ஒரு சவரன் ரூ.91,720க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ரூ.11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ரூ.92,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.165 உயர்ந்து ரூ.9,495க்கும், சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்து ரூ.75,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.175க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |