மீண்டும் அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை.., இன்றைய நிலவரம் என்ன?(25-11-2026)
Today Gold and Silver Price- இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய தங்க நிலவரம்
நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 16 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.15,360 வரை சரிந்துள்ளது.
இதற்கிடையே, கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை மீண்டும் உயர்ந்ததால் நகை வாங்குவோர் குழப்பமடைந்தனர்.
நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 உயர்ந்து ரூ.11,715 ஆகவும், சவரனுக்கு ரூ.920 உயர்ந்து ரூ.93,720 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாகக் குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.11,420 ஆகவும், சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.91,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.9,345 ஆகவும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.74,760 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலையும், இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.165 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,65,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |