ரூ. 9 ஆயிரத்தை தாண்டிய ஒரு கிராம் தங்க விலை.., இன்றைய நிலவரம் என்ன?
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால், சாமானிய மக்கள் தங்க நகையை வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில், இன்றைய (ஏப்ரல் 21) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
கடைசியாக கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து 3 நாட்கள் எந்த மாற்றமும் இன்றி இதே விலையே விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு இன்று அதிரடியாக தங்க விலை உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ஏப்ரல் 21ஆம் திகதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 18 காரட் தங்க விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,460க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.59,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை தொடர்ந்து 7வது நாளாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |