இன்றுமுதல் சிறுபடகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழைவது கிரிமினல் குற்றம்: கடுமையாகும் கட்டுப்பாடுகள்
இன்றுமுதல், சிறுபடகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழைவது கிரிமினல் குற்றம் ஆகும்.
சட்டவிரோத புலம்பெயர்தல் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட சில மாதங்கள் ஆகலாம் என்றாலும், பிரித்தானிய பிரதமரின் எல்லைக் கட்டுப்பாடுகள் முன்கூட்டியே அறிமுகம் செய்யப்பட உள்ளன.
மசோதா சொல்வது என்ன?
சட்டவிரோத புலம்பெயர்தல் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் என்னவென்றால், இன்றுமுதல், சிறுபடகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழைவது கிரிமினல் குற்றம் ஆகும்.
Credit: Getty
அப்படி சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவோர் புகலிடம் கோரவோ, நவயுக அடிமைத்தன விதிகளையோ அல்லது மனித உரிமை மீறலையோ பயன்படுத்த தடை. மனித உரிமைகள் சட்டத்தின் சில பகுதிகள் பிரித்தானியாவில் பொருந்தாது.
18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் மற்றும் மிக மோசமாக நோய்வாய்ப்பட்டோர் ஆகியோரின் வழக்குகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
மற்றவர்கள் பிரித்தானியாவில் தங்கியிருக்கவோ, வெளியேற்றப்பட்டபின் மீண்டும் பிரித்தானியாவுக்குத் திரும்பிவரவோ உரிமை கிடையாது.
புலம்பெயர்ந்தோர் முன்போல் ஆடம்பர ஹொட்டல்களில் தங்கவைக்கப்படமாட்டார்கள். அதற்கு பதிலாக, மாணவர்கள் தங்கும் அறைகள், பூங்காக்கள் மற்றும் பயணிகள் கப்பல்களில்தான் தங்கவைக்கப்படுவார்கள்.
Credit: Getty
சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவோரை விரைவாக வெளியேற்ற உள்துறைச் செயலருக்கு சட்டப்படி உரிமை அளிக்கப்படும்.
சட்டவிரோத புலம்பெயர்ந்தோர், தங்கள் சொந்த நாட்டுக்கோ அல்லது பாதுகாப்பான நாடு என கருதப்படும் வேறொரு நாட்டுக்கோ அனுப்பிவைக்கப்படுவார்கள்.
அதே நேரத்தில், உண்மையாகவே தேவையிலிருப்போருக்காக, பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான வழிமுறைகள் உருவாக்கப்படும்.
பிரான்ஸ் ஜனாதிபதியை சந்திக்கவும் திட்டம்
இந்த வார இறுதியில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இந்த சட்டவிரோத புலம்பெயர்தல் மசோதா குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.
Credit: PA