இன்று இளவரசர் ஹரிக்கு பிறந்தநாள்... முதல் ஆளாக அவரை வாழ்த்தியிருப்பது யார் பாருங்கள்
இளவரசர் ஹரிக்கு இன்று 37ஆவது பிறந்தநாள்...
அவர் பிறந்தபோது ராஜ குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்ததோ அந்த அளவுக்கு அவரது திருமணத்தின்போது ஒரு மகிழ்ச்சி அந்த குடும்பத்தில் நிலவியது.
ஆனால், திருமணம் முடிந்ததுமே ஹரியின் மனைவி மேகனால் குடும்பத்துக்குள் பிரச்சினைகள் உருவாகின. ஒரு விவாகரத்து பெற்ற, அமெரிக்கப் பெண்ணும் நடிகையுமான மேகனால் ராஜ குடும்பத்துக்குள் வாழத் தெரியாத நிலையில், தினம் ஒரு பிரச்சினையாக வெடித்து, கடைசியில் ராஜ குடும்பத்தையே விட்டு பிரிந்து அமெரிக்கா சென்று குடியேறினர் ஹரி மேகன் தம்பதியர்.
நாடு முழுவதும் இந்த விடயம் வருத்தத்தை ஏற்படுத்த, அதிகம் வருந்தியது பிரித்தானிய மகாராணியார்தான்.
ஆனாலும், ஹரி வீட்டில் ஒரு விசேஷம் என்றால் முதல் ஆளாக அவர்தான் வாழ்த்து தெரிவித்து வருகிறார். ஹரிக்கு குழந்தைகள் பிறந்தபோது பாட்டியான மகாராணியார் அளவுக்கு மற்றவர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்களா தெரியாது.
இப்போதும் பேரனுக்கு பிறந்தநாள் என்றதும் முந்திக்கொண்டு முதல் ஆளாக ஹரிக்கு வாழ்த்துச் சொல்லியிருப்பவர் சாட்ஷாத் மகாராணியாரேதான்!
பேரனுடைய பழைய புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார் மகாராணியார்.
அவரைத் தொடர்ந்து ஹரியின் தந்தை இளவரசர் சார்லஸ், அண்ணன் வில்லியம், அண்ணி கேட் என வரிசையாக ஆளாளுக்கு வாழ்த்துக்கள் அனுப்பி வாழ்த்து மழையில் ஹரியை நனையச் செய்திருக்கின்றனர் ராஜ குடும்பத்தினர்!