இவ்விரதம் இருந்தால் இவ்வளவு பயன்களா? : இன்று சங்கடஹர சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகர் ஆலயம் சென்று வணங்கி வந்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
இந்த மாசி மாதத்தில் வரும் அனைத்து விரதங்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த மாதத்தில் வரும் விரத்ததை கடைப்பிடித்தால் இந்த ஆண்டுதோறும் சிறப்பாக அமையும்.
அப்படி இந்த மாதத்தின் இறுதியில் சங்கட ஹர சதுர்த்தி விரதம் கிடைத்திருக்கிறது.
சங்கட ஹர சதுர்த்தி விரதம்
- சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி.
- ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
- இவ்விரதம் விநாயகனுக்கு உரியது. விநாயகரை வழிப்பட்டால் அனைத்துவிதமான பிரச்னைகளுக்குமான தீர்வு கிடைக்கும்.
விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்?
- அதிகாலையில் நீராடி, விநாயகரை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும்.
- உபவாசம் இருக்க இயலாதவர்கள் ஒருவேளை உணவு உண்டு விரதம் இருக்கலாம்.
- மாலையில் மீண்டும் நீராடி, விநாயகர் வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.
வணங்கும் முறை
- மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதற்குப் பூஜை செய்ய வேண்டும்.
- அதற்குப் பின் படம் அல்லது விக்கிரகத்துக்குப் பூஜை செய்ய வேண்டும்.
- விநாயகருக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபடலாம்.
- விநாயகர் அகவல் போன்ற பாடல்களைப் பாடலாம்.
- விநாயகரின் நாமங்களைச் சொல்லி அருகம்புல்லால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
- விநாயகருக்கு எளிய நைவேத்தியங்களாக பொரி, கடலை, வெல்லம் முதலியன வைத்து வழிபடலாம்.
- சிறப்பாக மோதகம் செய்து நைவேத்தியம் செய்வதால் பிள்ளையார் குளிர்ச்சியடைவார்.
பயன்கள்
- இவ்விரதத்தின் பலன் நோய்கள் குணமடைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும்.
- வாழ்க்கையில் தொடர்ந்து நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.
- சிறப்பான கல்வி அறிவு கிடைக்கம்.
- புத்திக்கூர்மை.
- நீண்ட ஆயுள்.
- நிலையான செல்வம்.
- சனியின் தாக்கம் குறையும்.
ஆகவே இன்று இந்த விரதத்தை கடைப்பிடித்தால் பல நன்மைகளை வாழ்க்கையில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.