சோபகிருது வருடத்தின் முதலாவது அமாவசை இன்று; இதை செய்தால் வாழ்வில் சிறந்த நன்மை கிடைக்குமாம்
முன்னோரை வழிப்படுவதற்காக நாம் பயன்படுத்தும் ஒரு நாள் அமாவசையாகும்.
அந்தவகையில் சோபகிருது வருடத்தின் முதலாவது அமாவசை திதி இன்றாகும்.
சோபகிருது வருடத்தின் முதலாவது அமாவாசை திதி
சோபகிருது வருடத்தின் முதல் அமாவாசை திதி இன்று காலை 11:23 மணியில் தொடங்கி ஏப்ரல் 20 ஆம் திகதி காலை 9.41 மணி வரைக்கும் இருக்கிறது.
இந்த நாளில் முன்னோரை வேண்டி வணங்கினால் எல்லா துன்பமும் விலகும் என்பது ஐதீகம்.
அமாவாசை தினத்தன்று என்ன செய்ய வேண்டும்?
காலையில் எழும்பி நீராடி, முன்னோர் படங்களுக்கு மாலை போட்டு வணங்க வேண்டும்.
குடும்பமாக வழிபட்டு ஆசிப்பெற வேண்டும்.
உணவு தானம் செய்ய வேண்டும்.
பித்ரு தோஷம் நீங்க
தங்களது பரம்பரையில் இறந்தவர்களுக்கு திதி கொடுக்காமல் இருந்தால் பித்ரு தோஷம் ஏற்படும்.
ஆகவே குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் இருக்கும். இதனை சரிசெய்ய அதிகாலையில் ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் தலை மூழ்கி நீராட வேண்டும்.
இந்நாளில் ஏழை எளியோருக்கு இயன்ற தானம் செய்தால் நல்லது.
இவ்வாறு செய்தால் வாழ்க்கை வளமானதாக இருக்கும்.