LPL 2024: இன்றைய போட்டியில் மோதவுள்ள அந்த இரு அணிகள்- வெற்றி யாருக்கு?
5 வது லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நேற்று ஆரம்பமாகியது.
இந்த ஆண்டு LPL தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் முன்னணி டி20 வீரர்கள் பலர் இந்த தொடரில் விளையாட உள்ளனர்.
சிலோன் பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று (02) நடைபெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முதல் போட்டி கோல் டைடன்ஸ் (Galle Titans) மற்றும் யாழ் கிங்ஸ் (Jaffna Kings) அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி பல்லகெலே விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
இன்றைய இரண்டாவது போட்டி கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ளதுடன் போட்டி பல்லேகல மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |