தமிழகத்தில் இன்று வெளுக்க போகும் மழை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தமிழ்நாட்டில் இன்று(டிச.21) 4 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் எந்த மாதிரியான வானிலை சூழல் நிலவும் என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..
இன்று(டிச.21) தமிழகத்தின் டெல்டா மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்தவகையில், இன்று(டிச.21) நாகை, திருவாரூர், தஞ்சை, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று அதிகபட்ச மேற்பரப்பு காற்றின வேகம் மணிக்கு 40km- ஆக இருக்கும். லேசான இடியுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. காலை 7 மணிக்கு வெளியிடப்பட்ட தகவலின் படி, இன்று நாகையில் மழைக்கான வாய்ப்பு அதிகம்.
Satish Bate/ Hindustan Times
திருவாரூர் மாவட்டத்தில் இன்று அதிகபட்ச மேற்பரப்பு காற்று 40km வேகத்தில் வீசும். லேசான இடியுடன் கூடி மழை பெய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்ச மேற்பரப்பு காற்றின் வேகம் மணிக்கு 40km வேகத்தில் இருக்கும். இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு அதிகம்.
புதுச்சேரியின் காரைக்கால் பகுதியில் இன்று அதிகபட்ச மேற்பரப்பு காற்றின் வேகம் 40km- ஆக இருக்கும். லேசான இடியுடன் கூடி மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |