தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்றது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
அந்தமான் கடலில் இருந்து சற்று இறங்கி தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவானது. இது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக உருவாகியுள்ளது.
இந்நிலையில் இது மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை (நவ 30) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.
இது அடுத்த 48 நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென் இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கனமழை எச்சரிக்கை
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில்கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |